fbpx

என் வாழ்க்கையே போச்சி, விதவை பெண் காவல் நிலையத்தில், பரபரப்பு புகார்…..! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…..!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நாடு முழுவதிலும், அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இது போன்ற தவறுகள் குறைந்ததாக தெரியவில்லை.

அந்த வகையில், சிவகங்கை பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த, கணவனை இழந்த விதவை பெண் ஒருவரை, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் உறங்கிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மானாமதுரை பகுதியில் இருக்கின்ற ஒரு செங்கல் சூளையில் கணவனை இழந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான், கடந்த 15ஆம் தேதி அந்த விதவை பெண் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவருடைய குடிசை வீட்டிற்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட மர்மகும்பல், அந்த பெண்ணை கதற, கதற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அந்த பெண், அவர்களிடம் இருந்து தப்பிக்க எவ்வளவு முயற்சி செய்தும், அந்தப் பெண்ணை அந்த நான்கு பேரும் சேர்ந்து,அவரை நாசம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அந்தப் புகாரை அடிப்படையாக வைத்துக் கொண்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணைக்கு பிறகு, இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து, ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Next Post

”யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்”..!! ”இறுதியில் ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்யலாம்”..!!

Mon Sep 18 , 2023
இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடியின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான மக்கள் நவீன உலக வழக்கத்தில் வாழ்ந்தாலும், பழங்குடியின மக்கள் தங்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை மாறாமல் கடைபிடிக்கின்றனர். அப்படி ஒரு தனித்துவமான பழக்க வழக்கத்தை கொண்டவர்கள் தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள். பொதுவாக நமது சமூகத்தில் காதலையே […]

You May Like