fbpx

Alert: அரபிக் கடலில் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

அரபிக் கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் கர்நாடக கடலோரப் பகுதியையொட்டி வரும் 21-ம் தேதி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அதன் தாக்கத்தால், அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 22, 23-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், வரும் 19-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 20 மற்றும் 23-ம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More: PM Kissan : 31-ம் தேதி வரை அவகாசம்… இவர்களுக்கு எல்லாம் மத்திய அரசு வழங்கும் ரூ.6000 கிடைக்காது…!

English Summary

New low pressure area in the Arabian Sea on the 22nd

Vignesh

Next Post

கொத்தமல்லி கீரையை 2 வாரம் வரை அழுகாமல் வைத்திருக்கலாம்!. ஒரு ஸ்பூன் மஞ்சள் இருந்தா போதும்!

Sun May 18 , 2025
You can keep coriander leaves from rotting for up to 2 weeks!. Do you know how?. Just a spoonful of turmeric is enough!

You May Like