fbpx

தனக்குத் தானே ‘RIP’ போஸ்ட்.! தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.! காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!

கேரளாவின் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இறப்பதற்கு முன் அந்த இளைஞர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை பதிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அலுவா அழுவா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதினர் அட் ஜிமல் ஷெரிஃப். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆறு முப்பது மணிக்கு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியது காவல்துறை.

இந்த விசாரணையில் நல்ல வேலை கிடைக்காத விரக்தியில் அந்த இளைஞர் தற்கொலை முடிவு எடுத்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போஸ்ட்மார்ட்டம் முடிந்து அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலையில் காவல்துறையினர் அவரது சமூக வலைதள பக்கத்தை பரிசோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்த இளைஞர் அஜ்மல் தான் இறப்பதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை பதிவிட்டு இருக்கிறார். அந்தச் செய்தியில் ரெஸ்ட் இன் பீஸ் அஜ்மல் ஷெரிஃப் 1995-2023 என பதிவு செய்து இருக்கிறார். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Post

சிபில் ஸ்கோர் கவலை வேண்டாம்.! எல்ஐசி பாலிசி இருந்தால் போதும் உங்களுக்கும் இனி லோன் கிடைக்கும்.!

Sun Dec 10 , 2023
எல்ஐசி என்பது இந்தியாவின் அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தங்களது பாலிசிதாரர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்களுக்கு அவர்களது பாலிசியின் அடிப்படையில் கடன் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது கடன் கேட்பவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையிலேயே கடன் வழங்கப்படுகிறது. இதனால் குறைவான சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது அரிது. ஆனால் எல்ஐசி அறிமுகப்படுத்தும் […]

You May Like