fbpx

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள்…..! அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை போக்சோ நீதிமன்றம்……!

கடந்த 2014 ஆம் வருடம் விபச்சார தடுப்பு வழக்கில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரை சென்னை பெரவள்ளூரில் இருக்கின்ற தனியார் காப்பகத்தில் காவல்துறையினர் சேர்த்தனர். அப்போது மற்றொரு விபச்சார வழக்கில் சிக்கிய பாத்திமா மூசா( 28) என்ற பெண்ணும் அந்த காப்பகத்தின் தங்கி இருந்தார்.


இந்த சூழ்நிலையில் தான் சிறுமிக்கு ஒரு நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து, அந்த காப்பகத்தில் இருந்து சிறுமியை கடத்திச் சென்ற பாத்திமா மூசா, தன்னுடைய தாயார் மற்றும் நண்பர்களின் உதவியுடன் பல மாதங்களாக பாலியல் தொழிலில் அந்த சிறுமியை ஈடுபடுத்தி இருக்கிறார். இது குறித்து காப்பக நிர்வாகிகள் காவல்துறையில் புகார் வழங்கினர். ஆகவே சென்னை ஆள்கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை மீட்டனர்.

அத்துடன் இந்த வழக்கில் பாத்திமா மூஸா (28) மாரியம்மாள் (49) கேளம்பாக்கம் சத்யா (40), தூத்துக்குடி தமிழ்ச்செல்வி (35) மற்றும் தரகர்கள் செம்மஞ்சேரி சதீஷ்குமார் (26), கோவளம் தனியார் விடுதி மேலாளர் செந்தில்குமார் (30), ரூம்பாய் மகேந்திரன் (32) உள்ளிட்டோரை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த விளக்கை விசாரித்த நீதிபதி எம் ராஜலட்சுமி குற்றம் சாட்டப்பட்ட மாரியம்மாள், சத்தியா, தமிழ்செல்வி உள்ளிட்டோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அதேபோல பாத்திமா மூஸாவுக்கு 10 வருட கால கடுங்காவல் தண்டனை விதித்தார்.

செந்தில்குமார், மகேந்திரன் உள்ளிட்டோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் 1.41 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பாக 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனு……! உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை……!

Fri Mar 3 , 2023
சென்ற வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு கூடியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். அதனை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிற்கும் விதமாக […]

You May Like