fbpx

அடக்கடவுளே ஒரு ஆசிரியருக்கு இவ்வளவு கோபம் வரலாமா? மாணவனை மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்த ஆசிரியர்!

பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என்று மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரையில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் மாணவர்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துகின்றன. இது போன்ற தாக்குதலால் மாணவர்களின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை அடுத்துள்ள ஹாக்லி கிராமத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகின்றது. அந்தப் பள்ளியில் முத்தப்பா, எல்லப்பா மற்றும் கீதா உள்ளிட்டோர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் நேற்று காலை பள்ளி ஆரம்பித்த உடன் இருவரும் பள்ளியின் முதல் மாடியில் வழக்கம் போல தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஆசிரியர் முத்தப்பா ஆசிரியை கீதாவை அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த கீதாவின் மகன் பரத், ஆசிரியர் முத்தப்பாவை தடுத்து நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். கோபமுற்ற முத்தப்பா பரத்தை முதல் மாடியில் இருந்து கீழே தூக்கி எரிந்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பரத் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கின்ற ஆசிரியர் மொத்த முத்தப்பாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். பள்ளி ஆசிரியர் மாணவனை முதல் மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிரியர் என்பவர் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருப்பது அவசியம். அப்போதுதான் ஒருவருக்கு அந்த ஆசிரியரால் கற்பிக்கவும் முடியும். தீய வழிகளில் சென்றால் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவும் முடியும். ஆனால் இப்படி முரட்டுத்தனமாக முன்கோபியாக இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் பணியில் இருப்பதற்கே தகுதி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Next Post

அடேங்கப்பா..!! தண்ணீர் வரி ரூ.1.9 கோடி..!! தாஜ்மஹாலுக்கு முதல் முறையாக பில் தீட்டிய மாநகராட்சி..!!

Tue Dec 20 , 2022
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பலரும் வியந்து பார்க்கும் கலைநயம் கொண்ட தாஜ்மஹால் புராதன தன்மை கொண்டதால், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தாஜ்மஹால் நிர்வாக அதிகாரிகளுக்கு முதல் முறையாக சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, தாஜ்மஹாலுக்கு ரூ.1.9 கோடி தண்ணீர் வரியாகவும், ரூ.1.5 லட்சத்தை சொத்து வரியாகவும் செலுத்துமாறு […]
அடேங்கப்பா..!! தண்ணீர் வரி ரூ.1.9 கோடி..!! தாஜ்மஹாலுக்கு முதல் முறையாக பில் தீட்டிய மாநகராட்சி..!!

You May Like