fbpx

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்…..! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…..!

தலைநகர் சென்னையில் வீடு ஒன்றில் காவலாளியாக பணியாற்றியவர் மோகன்(64). வீட்டின் உரிமையாளரும், அவருடைய மனைவியும் பணிக்காக வெளியே சென்ற சமயத்தில் பள்ளி முடிவடைந்து வீடு திரும்பிய அவர்களுடைய 9 வயது மகளிடம் காவலாளி மோகன் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

இது குறித்து சிறுமியின் தாயார் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு முதியவரான மோகனை அதிரடியாக கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணை போக்ஸோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் டிஜி கவிதா ஆஜராகி வாதம் செய்தார். இதனை தொடர்ந்து, நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட மோகனுக்கு 7 வருட கால கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

அதோடு பாதிக்கப்பட்ட சிறுமைக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழம்.. இனி இந்தியாவிலும் விளைய போகிறது... விவரம் உள்ளே..

Wed Feb 15 , 2023
உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழம், தற்போது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பயிரிடப்பட உள்ளது.. ஜப்பானிய மியாசாகி என்று அழைக்கப்படும் உலகின் விலை உயர்ந்த இந்த மாம்பழம் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.. இந்த மியாசாகி மாம்பழங்கள் பொதுவாக ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த பழம் பழுத்தவுடன் ஊதா நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறும்.. ஒரு மியாசாகி மாம்பழம் சுமார் 350 […]

You May Like