fbpx

தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட வயதான தம்பதி….! பெரம்பலூர் அருகே பரபரப்பு….!

தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதை பார்த்தால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அனைவரும் தூக்கில் தான் தொங்க வேண்டும் என்ற ஒரு பேச்சு தமிழக மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

அந்த அளவிற்கு தங்க நகையின் மவுசு அதிகரித்துவிட்டது. இந்த தங்க நகையின் மவுசு அதிகரித்ததை தொடர்ந்து, பல்வேறு அசம்பாவிதங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(80) இவருடைய மனைவி பார்வதி என்ற மாக்காயி(70) இந்த தம்பதிகளுக்கு காந்தி செல்வம்பாள், மாக்காயி, சரசு என்ற 4️ மகள்கள் இருக்கிறார்கள். 4 பேரும் திருமணமாகி அதே ஊரில் கணவர்களுடன் வசித்து வருகிறார்கள்.சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் தம்பதிகள் இருவரும் ஊருக்கு நடுவில் ஒரே வீட்டில் தனியாக வசித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை வெகு நேரம் ஆன பிறகும் இந்த தம்பதியர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இருவரும் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதன்பிறகு வி.களத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வி களத்தூர் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

வீட்டிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. கொலையாளி தன்னை மோப்பநாய் அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உயிரிழந்த பார்வதியின் கழுத்தில் தாலி மட்டும் இருந்திருக்கிறது. தாலி கொடியுடன் கூடிய கருகமணி இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமிலாதேவி தலைமையிலான காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வீட்டின் அருகில் இருந்த மிளகாய் பொடி கொட்டியிருந்த இடம் மற்றும் அருகில் இருந்த சோலை காடுகளை ஆய்வு செய்தபோது அங்கு மிளகாய் பொடி தூவி இருந்த பிளாஸ்டிக் பை மற்றும் மதுபானத்துடன் கூடிய பாட்டிலும் இருந்திருக்கிறது.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும்படியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.ஊருக்கு நடுவில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

திருவாரூரில் இளைஞர் வெட்டி படுகொலை….! 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்….!

Wed Feb 1 , 2023
தற்போது தமிழகத்தில் கொலை செய்யப்படுவது என்பது ஏதோ காய்கறியை வெட்டுவதைப் போல என்றாகிவிட்டது சர்வ சாதாரணமாக பட்ட பகலில் நட்ட நடு ரோட்டில் கொலை செய்து விட்டு சென்று விடுகிறார்கள். இது போன்ற அசம்பாவிதங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது ஆனால் மாநில அரசு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறது. முதலமைச்சரோ காவல் துறையும், சட்டம் ஒழுங்கும் என்னுடைய நேரடி மேற்பார்வையில் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது […]
பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like