fbpx

பாஜக முக்கிய நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை…..! சென்னையில் பயங்கரம்…..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் (42) இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக செயல்பட்டு வருகிறார். இவர் மீது 15க்கும் அதிகமான வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், தான் நேற்று இரவு தன்னுடைய 4 சக்கர வாகனத்தில் ஓட்டுநருடன் சென்னையில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார் சங்கர். அந்த கார் பூந்தமல்லி நசரத்பேட்டை சிக்னல் அருகே போய்க்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த காரை வழிமறித்த ஒரு கும்பல் அந்த காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசி இருக்கிறது. இதனால் காரில் இருந்து இறங்கி பி பி ஜி சங்கர் சாலையில் ஓடினார்.

ஆனாலும் அந்த மர்ம கும்பல் ஷங்கரை விடாமல் விரட்டிச் சென்று அவர் ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது அவர்கள் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஷங்கர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

ஷங்கரை சரமாரியாக வெட்டப்படுகொலை செய்துவிட்டு அந்த மர்மகும்பல் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிபிஜி சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோட இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Next Post

அரசு ஊழியர்களுக்கு இனி 42 நாட்கள் சிறப்பு விடுப்பு..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Fri Apr 28 , 2023
உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்த உத்தரவில், உறுப்பு தானம் மிகப் பெரிய அறுவை சிகிச்சை. இதில் இருந்து குணமடைய அதிக காலம் ஓய்வு தேவைப்படுகிறது. உறுப்பு தானம் செய்வது மிகவும் உன்னதமான செயல். இதை மத்திய அரசு ஊழியர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சம் 42 நாட்கள் […]

You May Like