fbpx

விடியற்காலையில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த இருவர் கைது! காவல்துறையினர் அதிரடி!

தமிழக காவல்துறையினர் இரவு நேரங்களில் பல ஆபத்தான இடங்களாக கருதப்படும் பகுதிகளுக்கு ரோந்து பணிகளுக்கு செல்வதில்லை என்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.அதிலும் மதுரை பகுதியில் ஒரு சில இடங்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாததால் அந்த பகுதிகளில் பல வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் கடந்த2 நாட்களுக்கு முன்னர் அதிகாலை 4 மணி அளவில் மேத்தா நகர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2மர்ம நபர்கள் பூமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த கைபேசியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இது தொடர்பாக பூமணி அமைந்தகரை காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அதன் பிறகு குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தபோது, செல்போன் திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் உள்ளிட்ட 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் 2 பேரும் பூமணியிடமிருந்து கைபேசியை பறித்துக் கொண்டு உடனடியாக அடுத்த இடமான கோயம்பேடு பகுதியிலும், மற்றொரு நபரிடமும் கத்தியை காட்டி மிரட்டி கைபேசியை பறித்துக் கொண்டு தப்பி சென்றதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 செல்போன்கள் வழிமுறைக்காக பயன்படுத்தப்பட்ட பைக், கத்தி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் அசோக்குமார் மீது ஏற்கனவே புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஆனந்த் மீது 5 திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்கு பிறகு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

Next Post

விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை! ஈரோடு அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

Sat Dec 24 , 2022
தற்காலத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது அதீத அக்கறை வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் மீது தங்களுடைய விருப்பத்தை அதிகமாக திணிக்க தொடங்கி விட்டார்கள். அதுவே பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக மாறிவிடுகிறது. தற்காலத்து பிள்ளைகள் பெற்றோர்களின் பேச்சை எதிலும் கேட்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போதுள்ள கல்வி அறிவு மற்றும் வெளி உலக அறிவை அவர்கள் பயன்படுத்தும் ஆற்றலை பிள்ளைகள் பெற்றிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எடுக்கும் முடிவு […]

You May Like