கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வாசித்து வந்தார். கடந்த 2019 ஆம் வருடம் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் இதனைத் தொடர்ந்து, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியே யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இது போன்று பலமுறை அந்த சிறுமியை மிரட்டி அந்த சிறுமியின் சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ப்ரோ சட்டத்தின் கீழ் சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் சிறுமியின் சித்தப்பாவுக்கு 20 வருட கால சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.