நாட்டில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றனவே தவிர, குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இது போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை என்பதை கசப்பான உண்மையாக இருக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் டெல்லியில் நடைபெற்று உள்ளது. வடக்கு டெல்லியில் இருக்கின்ற வஜ்ராபாத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய நண்பரை பேப்பர் கட்டுரால் கொலை செய்து அவருடைய உடலை ஒருவர் எரித்திருக்கிறார் குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் முனீஷ்தீன் என்பதும் இந்த விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இவர் வஜ்ராபாத்தில் வசித்து வந்திருக்கிறார். நண்பரின் மனைவியுடன் முனீசுதின் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக விரிவாக விவரித்துள்ள காவல் துறை அதிகாரிகள் வஜ்ராபாத்தின் ராம் காட் முன்பு எரிந்த நிலையில் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதோடு அந்த உடல் 90 சதவீதம் தீக்காயத்துடன் இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சுதர்களில் ரத்தக்கரை படிந்திருந்தது. அந்த பகுதியில் இருந்து காகிதம் வெட்டும் இயந்திரம் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. பலியானவர் வஜ்ராபாத் பகுதியை சேர்ந்த ரஷீத் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.
அந்தப் பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் ரஷீத்துடன் ஒருவர் இருப்பது தெரிய வந்தது அதன் பிறகு அவர் முனீஷுதின் என்பது தெரியவந்தது. அடுத்த நாள் காலை ரோகிணி செக்டார் 16 இல் உள்ள பவானா சாலை அருகே அவர் வருவார் என்று தகவல் வந்தது ஆகவே திட்டமிட்டு ரசித்தை கைது செய்தோம் என்று கூறியிருக்கிறார்கள். காவல் துறையை சார்ந்தவர்கள்.
முனிஷுதீன் பிளம்மராகவும் ரஷீத் எலக்ட்ரீசியன் ஆகவும் வேலை பார்த்து வந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் 2 பேரும் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் செல்ல தொடங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் முனிஷுதினுக்கு, ரஷீத்தின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது ரஷீத் தன்னுடைய மனைவியை மது அருந்திவிட்டு வந்து அடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து முனிஷுதினும், அந்தப் பெண்மணியும் சேர்ந்து ரஷீத்தை கொலை செய்ய திட்டமிட்டனர்.
சென்ற 10, 15 நாட்களாகவே ரஷீத்தை கொலை செய்து விட வேண்டும் என்று முனிஷுதினை அந்தப் பெண் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் இருவரும் ரஷீத்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள். அவர்களுடைய திட்டத்தின் அடிப்படையில் முனிஷுதின் ரஷீத்தை ராம் காத் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த பகுதியில் அவர்கள் மதுவை குடித்து இருக்கிறார்கள். அப்போது போதையில் இருந்த ரஷீத்தை முனிஷுதின் கத்தியால் குத்தியுள்ளார்.
அதன் பிறகு கழுத்தை அறுத்து அவருடைய உடலையும் எரித்திருக்கிறார். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உடலில் அனைத்து ஆதாரங்களையும் அடையாளங்களையும் அழிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார்கள்.
இந்த விசாரணையில் இந்த தகவல்கள் அனைத்தும் தெரிய வந்திருக்கிறது. நண்பரை பேப்பர் கட்டரால் கொலை செய்து உடலை எரித்த சம்பவம் டெல்லியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.