fbpx

மீண்டும் ஒரு புயல் சின்னமா? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்ற வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென்று புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயலின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.மேலும், இந்த புயல் காரணமாக, பெய்த மழையால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சேதங்களை விளைவித்து சென்றிருக்கிறது இந்த புயல்.

இந்த நிலையில் தான் வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, விழுப்புரம், திருவள்ளூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இன்னமும் கனமழை பெய்து வருகிறது. புயலின் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்து வந்த சூழ்நிலையில், புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், மழை சற்று ஓய்வு வழங்கியிருந்தது. இந்த நிலையில் தான் நேற்று விழுப்புரம், கோலியனூர், விக்ரவாண்டி, அரசூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. மரக்காணம், வானூர், திண்டிவனம் போன்ற பகுதிகளிலும் மழை பொழிவு காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர், கமலாபுரம், கொரடாச்சேரி, சேந்தமங்கலம் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஆகவே தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்து கொண்டது. மயிலாடுதுறை, குற்றாலம், மங்கைநல்லூர், மணல்மேடு போன்ற பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். திருப்பத்தூர், நாற்றம்பள்ளி, ஜோலார்பேட்டை போன்ற இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பாலாற்றிற்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் சற்றே மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

இதற்கு நடுவில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மெய்யூர், புள்ளரம்பாக்கம், திருப்பாச்சூர், கடம்பத்தூர் போன்ற இடங்களில் கனமழை காரணமாக, சாலைகளில் குளம் போல நீர் தேங்கி இருந்தது. திருவள்ளூர் பகுதியில் வைத்திய வீரராகவர் சுவாமி கோவில் முன்பு மழை நீருடன் கழிவு நீரும் கலந்ததால் பக்தர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளானார்கள்.

அதேபோல தேனி மாவட்டம் பெரியகுளம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதற்கு நடுவில் நீலகிரி மாவட்டம் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் சாரல் மழையுடன் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனத்தை இயக்கி சென்றனர். ஆகவே தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது. வரும் 13ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதிகளில் வங்கக்கடலில் மறுபடியும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இது புயல் சின்னமாக உருமாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும், ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுப்பதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம் தென்படுகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒருவேளை இது புயல் சின்னமாக உருவெடுத்தால் இதற்கு மொக்கா புயல் என்று பெயரிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

புயல் ஓய்ந்தாலும் ஓயாத மழை! இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!

Mon Dec 12 , 2022
கடந்த வாரம் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை பின்பு புயலாக உருவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. அதோடு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது. இந்த புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, பல முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான அணைக்கட்டுகள் நிரம்ப தொடங்கினர்.இதனை தொடர்ந்து, கடந்த 9ம் தேதி இந்த […]

You May Like