கடந்த 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பாக தென்னரசுவும் போட்டியிட்டார்கள். இதை தவிர தேமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை களம் இறக்கி இருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பமானது. 2 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றது.
இதற்கு நடுவே தேர்தல் முடிவுகள் தாமதமாக வருவதாக தெரிவித்து தேர்தல் அலுவலர்களிடம் பத்திரிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பத்திரிகையாளர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படவில்லை. முதல் சுற்று அறிவித்தவுடன் 3வது சுற்று ஆரம்பமாகும் மைக்ரோ அப்சர்வர் முன்னிலையில் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது.
வழக்கமாக எப்போதும் முதல் சுற்று நேரம் ஆகும் அப்சர்வர் கையெழுத்து பெற்று அதிகாரப்பூர்வமாக முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெறும் தேர்தல் முடிவு அறிவிப்பது சரியாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
ஊடக தொடர்புக்கு அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஊடகத்தினரை தடுத்து நிறுத்துவது எங்களுடைய நோக்கமல்ல. தேர்தல் ஆணைய விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து அறிவிப்புகளும் இருக்கும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முடியாது. முதல் முடிவை அறிவித்த பின் 3வது சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர் அப்படி செய்வதுதான் விதிமுறையாக இருக்கும் இது குறித்து வெளியாகும். தகவல் அதிகாரப்பூர்வ மற்றவை இங்கிருந்து நாங்கள் கொடுப்பது மட்டுமே அதிகாரப்பூர்வமான தகவல். தபால் வாக்கு இருப்பதால் சற்று தாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.