fbpx

பழிக்கு பழி முன்னாள் அமைச்சர் கொலை குற்றவாளி படுகொலை! காவல்துறையினர் விசாரணை!

தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பயங்கர சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற தொடங்கி விட்டனர்.ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் காவல்துறையினரால் இதனை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன்(32). பிரபல ரவுடியான இவர் மீது முன்னாள் அமைச்சர் வி எம் சி சிவகுமார் கொலை வழக்கு போன்ற 19 வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் தான் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த இளவரசனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இளவரசன் நிபந்தனை ஜாமின் வாங்கினார். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வழக்கம் போல நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு தன்னுடைய நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சியை நோக்கி போய்க் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்து தாக்க முற்பட்டனர். இதனால் இளவரசனுடன் வந்த அவருடைய நண்பர்கள் பயம் காரணமாக, தப்பி ஓடி விட்டனர்.

ஆனால் இளவரசனை சுற்றி வளைத்த அந்த கும்பல் தலை, மார்பு போன்ற பல்வேறு பகுதிகளில் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த இளவரசன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இவரை கொலை செய்த கும்பல் அந்த இடத்திலிருந்து தப்பி சென்றுவிட்டது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இளவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை பிடிப்பதற்காக 4 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது.

Next Post

தமிழ்நாட்டையே உலுக்கிய கொலை..!! மனைவி, 4 குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை..!! குடும்பத் தலைவன் தற்கொலை..!!

Tue Dec 13 , 2022
திருவண்ணாமலை அருகே மனைவி, 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவருடைய மனைவி வள்ளி. இந்தத் தம்பதிக்கு த்ரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4) ஆகிய 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் இருந்தனர். […]
தமிழ்நாட்டையே உலுக்கிய கொலை..!! மனைவி, 4 குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை..!! குடும்பத் தலைவன் தற்கொலை..!!

You May Like