fbpx

எலக்ட்ரிக் ட்ரெயின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட உயர்நீதிமன்ற இளம்பெண் வழக்கறிஞர்!

இப்போதெல்லாம் பெண்கள் நினைத்தது அனைத்தும் உடனடியாக நடைபெற வேண்டும் என்று நினைக்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். தாங்கள் நினைத்ததை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என்பதில்தான் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

அப்படி தாங்கள் நினைத்ததை செய்து முடிப்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.ஒருவேளை தாங்கள் நினைப்பது நடக்கவில்லை என்றால் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா மணலூரை சேர்ந்தவர் ஹேமாவதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே தன்னுடைய தோழிகளுடன் தனியறை எடுத்து தங்கி வந்தார். நாள்தோறும் மின்சார ரயில் மூலமாக பயணம் செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் நேற்று காலை ஹேமாவதி பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார். அங்கே நின்றவாறு கைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர், அப்போது அந்த வழியாக செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில் முன்பு திடீரென்று பாய்ந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்ட சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கினர். இதனை தொடர்ந்து எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹேமாவதி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கறிஞர் ஹேமாவதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Next Post

சசிகலா புஷ்பா வீட்டில் கல்வீசி தாக்குதல்..!! காவல்துறையினர் குவிப்பு..!! பெரும் பரபரப்பு

Thu Dec 22 , 2022
தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா இல்லத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பாஜக நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை […]
சசிகலா புஷ்பா வீட்டில் கல்வீசி தாக்குதல்..!! காவல்துறையினர் குவிப்பு..!! பெரும் பரபரப்பு

You May Like