fbpx

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான அறிக்கை…..! அண்ணாமலை மீது வழக்கு பதிந்த காவல்துறை…..!

வடமாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களின் மூலமாக போலியான காணொளிகள் வெளியாகி இருந்தனர். இதன் காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டதால் தொடர்வண்டிகள் மூலமாக சொந்த ஊருக்கு திரும்புவதாக தகவல் கிடைத்தனர். ஆனாலும் தாங்கள் அனைவரும் கோலி பண்டிகையை கொண்டாடுவதற்காகவே செல்வதாக தொழிலாளர்கள் கூறினர்.

வட மாநில தொழிலாளர் தொழிலாளர்கள் பயம் கொள்ள தேவையில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதம், வெறுப்பு பிரச்சாரத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள் உள்ளிட்டோர் வட மாநில சகோதரர்கள் மேல் தொடர்ந்து பிரயோகப்படுத்தி வரும் வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு தமிழகத்தின் மாண்பை காப்பார் என்று நம்புவதாக தெரிவித்திருந்தார் அண்ணாமலை.

இந்த சூழ்நிலையில், அவர் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அரசுக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல், சாதி, மதம், இனம் குறித்து கலகம் செய்ய தூண்டுதல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

Next Post

“ கோவை, மங்களூரு குண்டுவெடிப்புக்கு நாங்க தான் காரணம்..” ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்...

Sun Mar 5 , 2023
தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் தங்கள் பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக ஈரானின் ஐஎஸ்கேபி என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது… ஈரானின் குராசன் மாகாணத்தில் செயல்படும் ISKP (Islamic State in Khorasan Province) அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘Voice of Khurasan’ என்ற இதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.. அந்த கட்டுரையில், தென்னிந்தியாவில், தங்கள் பயங்கரவாதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.. எனினும் […]
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்..! மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை..!

You May Like