தற்போது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று இளைய தலைமுறையினர் படாத பாடு படுகிறார்கள். அதாவது வேலை தேடி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி படையெடுக்கும் இளைய தலைமுறை வேலை கொடுத்தால் போதும் என்ற ஆர்வத்தில் பல தவறான தொடர்புகளை வைத்துக் கொள்வதால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் சூனியம் ஆகி விடுகிறது.
ஆண்களுக்குத்தான் இந்த நிலை என்றால் பெண்களுக்கும் அதே நிலை தான் ஏற்படுகிறது.ஆகவே வேலை தருவதாக தெரிவித்தால் வெளியூருக்கு செல்லும் நபர்கள் அங்கே மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.அந்த வகையில், வேலை தேடி சென்னைக்கு வரும் வடமாநில இளம்பெண்களை தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து ஒரு சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த கும்பல் தொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இன்று சூழ்நிலையில்தான் சென்னை துரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் விடுதியில் வட மாநில பெண்களை வைத்து ஒரு சிலர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டது உறுதியானது.இந்த விவகாரம் குறித்து திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கணேஷ் (22) தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜ பிரதாப் (24) திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் பாபு என்கின்ற ஹலாம் (28) மொனீர் உசேன்(29) உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் அங்கே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வட மாநிலத்தைச் சார்ந்த 8 பெண்கள் உட்பட 9 பேரை மீட்ட காவல்துறையினர் அவர்களை சென்னையில் இருக்கின்ற அரசு காப்பகம் ஒன்றில் தங்க வைத்தனர்.தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து ஏமாற்றும் நபர்களிடமிருந்து பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.