fbpx

ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமா…? அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நிறுவனம்…..!

கடந்த 14ஆம் தேதி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அந்த பட்டியலில் திமுகவினரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார் அண்ணாமலை.

அதனுடைய இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள இது தொடர்பான அறிக்கையில் தங்களுடைய நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் சில தனி நபர்கள் விருப்புப் பிரச்சாரத்தின் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது அந்த நிறுவனம்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தங்களுடைய நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாபம் பார்ப்பதாகவும், ஊழல்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் பல கருத்துக்கதைகளும் எந்த வித ஆதாரமும் இல்லாத வதந்திகளும் பரப்பப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் அண்ணாமலையை சாடியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பே தங்களுடைய நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வந்ததாகவும், தங்களுடைய நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இயங்கவில்லை எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அதோடு தங்களுடைய சொத்து மதிப்பு 38,827 கோடி ரூபாய் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார். அதனை மறுப்பதாகவும் அந்த நிறுவனம் மற்றும் தங்களுடைய பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்களை தவறான மதிப்புகளுடன் அண்ணாமலை சித்தரித்து இருக்கிறார் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு அண்ணாமலையின் இந்த செயலால் பல வருட உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்து இருப்பதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குற்றம் சுமத்தி இருக்கிறது.

Next Post

ஜி ஸ்கொயர் விவகாரம் திமுக எம்எல்ஏ வீட்டில் வருமானவரித்துறை திடீர் சோதனை…..! சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்…..!

Mon Apr 24 , 2023
தமிழகத்திற்கு 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தினார். ஆகவே இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தகவல் வந்ததை தொடர்ந்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாக […]

You May Like