fbpx

கொட்டி தீர்த்த கனமழை….! தென்காசியில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி……!

கோடை காலம் தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது வானிலை மாறி அவ்வப்போது பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில், பகுதியில் காலைல இருந்து அதிக அளவில் வெயில் இருந்து வந்தது. இந்த நிலையில் இரவு நேரத்தில் சென்ற இரு தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

அத்துடன் நள்ளிரவில் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெசவாளர் காலனி மற்றும் இன்னும் பல பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் அந்த பகுதி மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் தான் சங்கரன்கோவிலில் 2வது நாளாக நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதற்கு நடுவில் அடுத்த ஒரு வாரத்திற்கு மதியத்திற்கு மேல் மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.2 கோடி கிடைக்கும்..!! எப்படி தெரியுமா..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Tue Apr 25 , 2023
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள் மற்றும் பத்திரங்கள், குறுகியகால சந்தை பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது ஆகும். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்று திரட்டி உருவாக்கப்படுகிறது. பொதுவாக முதலீட்டு நோக்கத்தை கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே பணத்தை திரட்டும் ஒரு அமைப்பாக இது இருக்கிறது. உங்களால் இப்போதில் […]

You May Like