ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, உணர்ச்சி என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உணர்ச்சியானது எல்லை மீறி செல்லும்போது ஏதாவது ஒரு வகையில் எல்லோரும் தவறு செய்து விடுகிறார்கள்.
அது கோபமோ, அன்போ, பாசமோ, காமமோ, காதலோ எந்தவித உணர்வாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல ஏதாவது ஒரு உணர்வு எல்லை மீறி சென்று விட்டால் அது நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது.
அந்த வகையில், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(40) என்பவருக்கும் அதே வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணிக்கும் தகாத உறவு இருந்து வந்திருக்கிறது. அந்த பெண்ணிற்கு கணவர் இல்லாத நேரத்தில் மணிகண்டனும், அந்த பெண்மணியும், அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் வழக்கம் போல அந்த பெண்ணின் வீட்டிற்கு மணிகண்டன் சென்று இருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் கணவரின் சகோதரர் வேலு திடீரென்று வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மணிகண்டனும் அந்த பெண்மணியும் இருந்த காலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் கொழுந்தன் அண்ணன் இல்லாத சமயத்தில் உனக்கு இங்கு என்ன வேலை? இன்று கோபத்துடன் கேட்டு மிகக் கடுமையாக மணிகண்டனை தாக்கியுள்ளார். இதனால் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவருக்கு அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில்தான் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மணிகண்டனின் மனைவி லதா, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, வேலுவை புழல் சிறையில் அடைத்தனர்.