தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாக தமிழக அரசை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து பேச முயற்சி செய்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் உடனடியாக அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொண்டார்.
பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அந்த இரு கட்சிகள் இடையே கடந்த சில தினங்களாக வார்த்தை போர் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் அது மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் இடத்தில் கரு நாகராஜன் செய்த இந்த செயல் பார்க்கப்படுகின்றது.இந்த போராட்டத்தில் பாஜகவின் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பூ, உமா ஆனந்த் மற்றும் பல மாநில நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டனர்.