திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார் குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (30) இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்று இந்து (28 )இந்த தம்பதியினருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இசக்கியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே இந்த மன நல பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை ரமேஷ் ஆட்டோ சவாரிக்காக வெளியில் சென்று விட்டார். காலை இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பதறிப்போன உறவினர்கள், பல்வேறு பகுதிகளில் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குழந்தையின் சடலம் கிடப்பது வெகு நேரத்திற்கு பிறகு தெரியவந்தது. இது தொடர்பாக களக்காடு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து குழந்தையின் சார்ந்த இடத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இசக்கியம்மாள் ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரே பெத்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த 2021 ஆம் வருடம் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை பிறந்து 20 நாட்கள் ஆன நிலையில், அந்த குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது இந்த விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.