fbpx

மாவட்ட பாஜக தலைவரை கொலை செய்ய முயற்சி…..! ராமநாதபுரம் அருகே வழக்கறிஞர் கைது…..!

ராமநாதபுரம் மாவட்டம் பாஜக தலைவர் தரணி முருகேசன் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தன்னுடைய வீட்டின் கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் தந்த 2 பேரை அவரது வீட்டில் இருந்த கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் தரணி முருகேசனிடம் பணிபுரியும் ஊழியர் கணேசன் என்பவர் காயமடைந்தார்.

அதன் பிறகு ஆயுதங்களுடன் வந்த சென்னை எண்ணூரை சேர்ந்த மோகன் (34) புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த சுரேஷ் (34) உள்ளிட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆன இவர்கள் தரணி முருகேசனை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது பெரிய வந்தது.

அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் கதிரவனின் கார் ஓட்டுநர் பாலமுருகன், அவருடைய ஆதரவாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர். கதிரவன், பாஜகவின் வழக்கறிஞர் சண்முகநாதன் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படையினர் வழக்கறிஞர் சண்முக நாதனை சென்னையில் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் ஜே.எம்.என்.2 நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் பிரபாகரன் முன்னிலையில் அவர்களை ஆஜர் படுத்தினர் சண்முக நாதனை மே மாதம் 23ஆம் தேதி வரையில் மதுரை மத்திய சிறையில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்தார் கதிரவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Next Post

தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்….! திருப்பதி அருகே பரபரப்பு…..!

Thu May 11 , 2023
தமிழகத்தின் சென்னையிலிருந்து சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டா மற்றும் சூலூர் பேட்டா காவல்துறையினர் ஆந்திர மற்றும் தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூலூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்படி நடத்திய சோதனையில், சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை சோதனை செய்தனர். அந்தக் காரில் 5 கிலோ தங்க […]

You May Like