முன்பெல்லாம் பெரிய, பெரிய அரசியல்வாதிகள் தான் பல கொலைகளை அசால்ட்டாக செய்துவிட்டு அந்த கொலை வழக்குகளிலிருந்து மிகவும் சுலபமாக தப்பித்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் அதிகாரமும், செல்வாக்கும் தான் என்று பலமுறை சாதாரண மக்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரையில் எல்லோரும் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள்.
ஆனால் தற்சமயம் இது போன்ற ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது ஆனால் இந்த கொலையை செய்தவர் அரசியல்வாதியோ அல்லது சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவரோ கிடையாது.
அவர் ஒரு சாதாரண குடிமகன் தான் குடிமகன் என்றால் நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்யும் பலே குடிமகன்.அதாவது நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால், இவர் குடிபோதையில் நாள்தோறும் அவருடைய மனைவி மல்லிகாவிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், கடந்த 2013 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி மதியம் 2:30 மணி அளவில் வழக்கம் போல குடிபோதையில் வந்த தன்னுடைய கணவனுடன் மல்லிகா தகராறு செய்திருக்கிறார். இவர்களுக்குள் தகராறு அதிகரிக்கவே கோபமடைந்த ஜெயபால் அவர் வைத்திருந்த மது பாட்டிலில் விஷத்தை கலந்து மனைவியின் வாயில் ஊற்றி வாயையும், மூக்கையும் பொத்தி மல்லிகாவை கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பள்ளிபாளையம் காவல்துறை பதிவு செய்த வழக்கை விசாரணை செய்த நாமக்கல் விரைவு நீதிமன்றம் ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2018 ஆம் வருடம் தீர்ப்பு வழங்கியது. விரைவு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதமாக ஜெயபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி என் பிரகாஷ், ஆனந்த், வெங்கடேஷ் அமர்வு மனைவியை கொலை செய்த ஜெயபால் அதிகாலை 5 மணி அளவில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலரிடம் மனைவியை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
மேலும் வேத பரிசோதனை அறிக்கையிலும் மல்லிகாவின் வயிற்றில் விஷம் இருந்ததாக எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து ஜெயபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.