அனைத்து விஷயங்களிலும் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்கள் சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை விரைவு பின்னாளில் அவர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அதோடு, அவர்களுடைய பெற்றோர்களையும் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி விடுவார்கள்.
அந்த வகையில், மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் கார்த்திக் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே அவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியே சென்று வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கார்த்திக் அடிக்கடி அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் கீரைதுறையில் இருக்கின்ற தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்று வந்த அந்த மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அவருடைய காதலன் கார்த்திக் .இதனை அவருடைய நண்பர்கள் மறைந்திருந்து கைபேசியில் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவை காட்டி மிரட்டி காதலன் துணையுடன் அவருடைய நண்பர்கள் அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக அந்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதிருக்கிறார்.இதனை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த மாணவியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்கள் இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு கார்த்திக், ஆதி, ஹரிஷ் உள்ளிட்ட மூவரையும் சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.