தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு தேவையாகிவிட்டது. ஆனால் இந்த செல்போன் மூலமாக பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் அதே நேரம் இதற்கு மற்றொரு கோர முகமும் இருக்கிறது.
தற்போது உள்ள அதிநவீன சாதனங்களை பொறுத்தவரையில் அந்த சாதனங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நன்மையும், தீமையும் அடங்கியிருக்கிறது..
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிறுமியை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் சென்ற புதன்கிழமை மைனர் சிறுமி ஒருவர் 4 நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரில் 2 பேருடன் பாதிக்கப்பட்ட சிறுமி நட்பாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரில் 2 பேருடன் நட்பாக அந்த சிறுமி இருந்ததன் காரணமாக, செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்து நண்பர்கள் இருவரும் அந்த சிறுமியை ஒரு இடத்திற்கு அழைத்ததால் அவரும் நம்பி சென்றிருக்கிறார்.
ஹூப்ளி பைபாஸ் ரிங் சாலை பாலம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. அவருடைய நண்பர்கள் இருவரால் அழைத்து வரப்பட்டுள்ளார்.மேலும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் அந்த பெண்ணை அழைத்துச் சென்ற குற்றவாளிகள் தனிமையான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, குற்றம் சமத்தப்பட்டவர்கள் 4 பேர் என்பதால் அதில் 2 பேர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். குற்றம் சுமத்தப்பட்ட மற்ற 2 பேரின் அடையாளம் இதுவரையில் தெரியவில்லை. குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேர் மீதும் ஹூப்ளி கோகுல் சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மைனர் சிறுமிக்கு செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பொதுமக்களிடையே பெரும் அதிர்வகைகளை ஏற்படுத்தி இருக்கிறது.