fbpx

தலாய்லாமாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து: கொடுத்த உறுதி மொழியை, மறந்துவிட வேண்டாம் சீனா..!

சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குற்றம்சுமத்தி வரும் நிலையில் தலாய்லாமாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் விமர்சனம் செய்து வருகிறது.இதற்கிடையே, நேற்று முன்தினம் 87-வது பிறந்தநாள் கொண்டாடிய தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்காக அவரை சீனா நேற்று விமர்சனம் செய்ததுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியது, தலாய்லாமாவின் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நிலைப்பாட்டை இந்திய தரப்பு முழுமையாக உணர வேண்டும். சீனாவுக்கு அளித்த வாக்குறுதியை இந்திய தரப்பு காப்பாற்ற வேண்டும். அதற்கேற்ப பேசவும், செயல்படவும் வேண்டும். சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு திபெத் சார்ந்த விஷயங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல், தலாய்லாமாவுக்கு வாழ்த்து கூறிய அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனையும் அவர் விமர்சித்துள்ளார்.

Baskar

Next Post

துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

Fri Jul 8 , 2022
தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.. இதில் அவர் மார்பில் குண்டு பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.. ரத்த வெள்ள்த்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். […]

You May Like