யாராக இருந்தாலும் தானே உழைத்து சாப்பிட்டால்தான் உடம்பில் ஒட்டும். அதேபோல தான் உழைத்து சம்பாதித்த சொத்து தான் தன்னுடைய சந்ததிகளை சாறும் அபாண்டமான முறையில், ஒருவரிடம் இருந்து சொத்துக்களை அபகரித்து தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த சொத்து இறுதி வரையில் அவர்களிடம் இருக்காது.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி மேல தெருவை சேர்ந்தவர் சக்திவேல் டைலர் ஆன இவருடைய மனைவி செல்வி (35) மலேசியாவில் வேலை செய்து வந்த சக்திவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நாடு திரும்பினார்.
இவர்களுடைய வீட்டின் அருகே வசித்து வருபவர் தான் பரமசிவம். இவருக்கும், சக்திவேலுக்கும் இடையில் தங்களுடைய இடத்தை அளந்து பிரிப்பது குறித்து தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 27 ஆம் தேதி காலை இந்த விவகாரம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது இடத்தை அளந்து ஊன்றி வைக்கப்பட்டிருந்த கற்களை பரமசிவத்தின் குடும்பத்தினர் அகற்றியதாக சொல்லப்படுகிறது.
இதனால் சக்திவேலின் மனைவி செல்வி அவர்களை தட்டி கேட்டு இருக்கிறார். ஆகவே கடும் ஆத்திரம் கொண்ட பரமசிவம் தரப்பினர் செல்வியின் மீது விரோதமாக இருந்து கொண்டிருக்கின்றனர் இதனைத் தொடர்ந்து, கடந்த 27ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக செல்வி வீட்டின் பின்புறம் சென்றபோது பரமசிவம், அவருடைய மகன்கள் சுரேஷ், சப்பாணி, ஜோதிபாசு, பேரன் அவினாஷ் உள்ளிட்டோர் அவரை சரமாரியாக அடித்து, அவருடைய மார்பில் மிதித்து அவரை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
இதில் படுகாயம் அடைந்த செல்வி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார்.இது தொடர்பாக செல்வி கொடுத்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு சமயபுரம் கொள்ளிடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல செல்வியின் குடும்பத்தின் மீது பலமுறை பரமசிவம் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக பலமுறை புகார் வழங்கியும் காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று செல்வியின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.நிலத்தகராறில் பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.