தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார், இவருடைய மனைவி மாரியம்மாள் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். மாரியம்மாளுக்கு முருகேசன் என்ற ஒரு அண்ணன் இருக்கிறார், முருகேசனுக்கு மகேஷ் என்ற மகன் ஒருவரும் இருக்கிறார்.
இந்த நிலையில், ராம்குமார் அந்தப் பகுதியில் சற்று வசதி மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சொத்து அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.சொத்து அதிகமாக இருப்பதால் தன்னுடைய தங்கைக்கு குழந்தை இல்லாத காரணத்தால், அந்த சொத்துக்கள் அனைத்தும் நமக்கே வந்து சேரும் என்று முருகேசன் ஆசையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அண்ணனின் நினைப்பு இப்படி இருக்க நடந்த காரியமோ வேறு.
அண்ணன் எப்படியாவது தங்கையின் சொத்துக்களை அவருக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தை முன்வைத்து அபகரித்து விடலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் தங்கை ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார். இது முருகேசனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. ஆகவே இதனால் ஆத்திரம் கொண்ட அவர் தன்னுடைய தங்கை மற்றும் அவருடைய கணவரின் வீட்டிற்கு சென்று முருகேசனும் அவருடைய மகன் மகேஷும் தகறாரில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியதன் அடிப்படையில் அதன் மிகுதியாக முருகேசன் மாரியம்மாளின் கண்ணிலும் அவருடைய கணவர் ராம்குமாரின் கண்ணிலும் மிளகாய் பொடியை தூவி அறிவாளால் முருகேசனும் அவருடைய மகன் மகேஷ் சரமாரியாக விட்டு உள்ளனர் இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி அதன் பிறகு அங்கிருந்து தந்தையும் மகனும் தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக காவல்துறைக்கு அண்டை வீட்டார்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி காவல்துறையினர் தலைமறைவாக இருக்கின்ற முருகேசன் மற்றும் அவருடைய மகன் மகேஷ் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.