அரசாங்கம் என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்கள் திருந்துவது இல்லை. தொடர்ந்து அது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வருகிறார்கள்.
இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுவதை கேட்கும் போதும், பார்க்கும்போதும் இந்த அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மை என்பது ஏற்படத்தான் செய்கிறது. என்னதான் கடுமையான சட்டங்களை அரசாங்கம் இயற்றி வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றனவா? என்ற கேள்வியும் எழ செய்கின்றன.
அந்த வகையில், புதுச்சேரி கீழ் சாத்தமங்கலம் வாத்து பண்ணையில் வேலை பார்த்து வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 11 பேரில் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கன்னியப்பன் உட்பட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், சுபா, காத்தவராயன் உள்ளிட்ட இருவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ஆறுமுகம் என்பவருக்கு 10 வருட கால சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, புதுச்சேரியில் கடந்த 2020 ஆம் வருடம் கீழே சாத்தமங்கலம் சகோதரி சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தன்னுடைய வாத்துப்பண்ணைக்கு வார்த்தைகளை பராமரிப்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சிறுமிகள் சில பேரை அழைத்து வந்து அந்தப் பண்ணையில் இருக்கின்ற அறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து வேலை வாங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வாத்துப் பண்ணையின் உரிமையாளர் கன்னியப்பன் உட்பட அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மதுபோதையில் வந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமிகள் குழந்தைகள் நல வாரியத்திடம் தெரிவித்ததை தொடர்ந்து மங்கலம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கன்னியப்பன் உட்பட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கடந்த 2 வருட காலமாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் தான் இன்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், வாத்து பண்ணையின் உரிமையாளர் கன்னியப்பன் அவருடைய மகன் ராஜ்குமார், சுபா சரத்குமார், சிவா, மூர்த்தி, காத்தவராயன், ஆறுமுகம் உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்ட 9 பேருக்கு தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
அதில் போக்ஸோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவருடைய மகன் ராஜ்குமார், சரத்குமார் உள்ளிட்ட 6 பேருக்கு சாகும் வரையில் ஆயுள் தண்டனையும், கன்னியப்பனின் மனைவி சுபா, காத்தவராயன் இருவருக்கும் ஒரு ஆயுள் தண்டனையும், ஆறுமுகம் என்பவருக்கு 10 வருட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஒருவருக்கு 7 லட்சமும், மற்ற 4 சிறுமிகளுக்கு 5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி போக்ஸோ நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.