fbpx

தற்கொலைக்கு முயன்ற பிரபல ரவுடி….! கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு….!

தமிழகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சிறை கைதிகள் தொலைபேசி பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதை சிறை நிர்வாகம் சரியாக கண்காணிக்கிறதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

சிறைக்கு சென்றால் அங்கே பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று பொதுவாக வெளியில் சொன்னாலும் ஒரு சிலர் சிறைக்குச் சென்று சொகுசாக இருந்து விட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், கடலூர் மத்திய சிறையில் சென்ற ஒரு வருடத்திற்கு மேலாக எண்ணுரை சேர்ந்த ரவுடி தனசேகரன் விசாரணை கைதியாக இருக்கிறார். இவர் மீது 30க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சென்ற ஆகஸ்ட் மாதம் கடலூர் மத்திய சிறையில் சிறை காவலர்கள் சோதனை செய்தபோது எண்ணூர் தனசேகரன் அறையில் கைபேசி மற்றும் சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது அதனை பறிமுதல் செய்த சிறை உதவி கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு எண்ணூர் தனசேகரன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் கூலிப்படையை வைத்து சென்ற ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உதவி சிறை கண்காணிப்பாளர் மணிகண்டனின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி செய்தார்.

இதில் அதிர்ஷ்டவசமாக அவருடைய குடும்பத்தினர் உயிர்த்தப்பினர். இந்த வழக்கில் தனசேகரன் மற்றும் அவருடைய கூலிப்படையை சார்ந்தவர்கள் அவருடைய மனைவி என்று 11 பேர் மீது கடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் எண்ணூர் தனசேகரன் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லப்பட்டு பிறகு மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை அதிகளவு பிபி மாத்திரைகளை சாப்பிட்டு சிறைக்குள் எண்ணூர் தனசேகரன் மயங்கி விழுந்தார். அதன் பிறகு சிறை ஊழியர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அங்கே அவருக்கு முதல் கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு அதன் பிறகு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மேலும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எண்ணூர் தனசேகரன் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.

அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது இது தொடர்பாக கடலூர் முதுநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை 15 நாளில் அகற்ற வேண்டும்.. மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..

Fri Feb 17 , 2023
தமிழகத்தில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை 15 நாளில் அகற்ற மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.. அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் இதுதொடர்பாக மின்சார வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.. அதில், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள், தனியார் ஆபரேட்டர்கள் மூலம் மின் வாரியத்தின் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி ஒயர்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்ற அகற்ற வேண்டும் […]

You May Like