கோயமுத்தூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி( 32) இவர் மீது கோயம்புத்தூர் மதுரை போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தனர் இன்றைய சூழ்நிலையில் தான் சென்ற மாதம் 12ஆம் தேதி சத்தியபாண்டி இளநீர் கடை அருகே தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டு உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதோடு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர்கள் தீவிரமான விசாரணையில் இறங்கினர்.
காவல்துறையினரின் விசாரணையில் முன்விரோதம் காரணமாக, இந்த கொலை நடைபெற்றுள்ளது என்று தெரியவந்திருக்கிறது. இந்த கொலை குறித்து சஞ்சய் ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் காஜா உசேன், ஆல்வின், சபுல் கான் உள்ளிட்ட 4️ பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரக்கோணம் நீதிமன்றத்திலும், சஞ்சய் ராஜா சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கோயமுத்தூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
இத்தகைய சூழ்நிலையில், விசாரணை காரணமாக, கரட்டுமடம் பகுதிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆய்வாளரை நோக்கி சஞ்சய் ராஜா சுட்டு இருக்கிறார். நொடிப்பொழுதில் ஆய்வாளர் கிருஷ்ண லீலா தன்னை தற்காத்துக் கொள்ள அருகில் இருந்த மரத்தின் பின்பு ஒளிந்து கொள்ளவே மறுபடியும் அவரை நோக்கி ரவுடி சஞ்சய் ராஜா சுட்டு விட்டு, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று தெரிவித்து கொலை வெறியுடன் அவரை தாக்க முற்பட்டிருக்கிறார்.
உடனடியாக தங்களை தற்காத்துக் கொள்வதற்காக உடன் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சஞ்சய் ராஜாவின் இடது கால் முட்டிக்கு கீழ் சுட்டுள்ளார். துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு இடது கால் முட்டியில் படவே சஞ்சய் ராஜா சரிந்து கீழே விழுந்தார். அவர் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே போட்டார். ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை அவசர உறுதி மூலமாக மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்திருக்கிறார்கள்.