சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த அகாடமியின் பரிந்துரையின் அடிப்படையில் நர்சிங் மாணவி இரவில் பயிற்சி எடுப்பதற்காக அயனாவரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சென்ற 8ம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் அந்த நர்சிங் மனைவி தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றுவதற்காக சென்று உள்ளார்.
அந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் உரிமையாளரும், தலைமை மருத்துவருமான விவேகானந்தன் மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று அந்த மாணவியின் குடும்ப விவரம் தொடர்பாக கேட்டிருக்கிறார். அதன் பிறகு உன்னையும், உன்னுடைய குடும்பத்தையும் இனிவரும் காலங்களில் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த மருத்துவமனையிலேயே மிக அதிக சம்பளத்தில் வேலையும் தருகிறேன் என்று தெரிவித்து மாணவி கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிகிறது.
மருத்துவரின் இந்த செயலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த மாணவி கையை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டார். அதேபோல அவ்வப்போது பாலியல் சீண்டலில் அந்த மருத்துவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவரின் தொந்தரவு தாங்க முடியாமல் பொறுமை இழந்த நர்சிங் மாணவி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கி உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.