கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியின் காமராஜர் நகர், ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன் (73) என்பவர் வசித்து வந்தார் இவருக்கு கணம் 68 என்ற மனைவி இருக்கிறார் இந்த தம்பதியினருக்கு 3️ மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். எல்லோருக்கும் திருமணம் நடந்து விட்டது. இவர்களுடைய 3வது மகன் செந்தில்(40) குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக, தன்னுடைய மனைவியை பிரிந்து கடந்த ஆறு மாத காலமாக பெற்றோருடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடராஜனும், செந்திலும் மது பாதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பின்னர் சமாதானம் அடைந்து இருவரும் உறங்குவதற்காக சென்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த நடராஜன் கீழே விழுந்ததால் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதாக தெரிவித்து அவசர ஊர்திக்கு தகவல் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவசர உறுதி ஊழியர்கள் நடராஜனை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். ஆகவே உறவினர்கள் அவருடைய உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர் இதற்கு நடுவில் நடராஜனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொள்ளாச்சி கிழக்கு காவல்துறை நடக்கிறது. புகார் சென்றதாக கூறப்படுகிறது. ஆகவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடராஜன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது தலையில் தாக்கபட்டதன் காரணமாக தான் நடராஜன் உயிரிழந்தார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதன் காரணமாக, காவல் துறையினர் நடராஜன் மகன் செந்திலை விசாரித்த போது குடிபோதையில் தன்னுடைய தந்தையை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
மேலும் காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் கீழே விழுந்து விட்டார் என்று தெரிவித்து நாடகமாடியுள்ளார் என்ற விவரமும் தெரியவந்தது. இதன் காரணமாக, செந்திலை காவல்துறையினர் கைது செய்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.