fbpx

சென்னை நீலாங்கரை கார் விபத்து உயிரிழந்த நபர்….! போதையில் கார் ஓட்டிய டிஎஸ்பி மகன் அதிரடி கைது….!

மது பழக்கம் என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கும். அப்படி அச்சிடப்பட்ட மது பாட்டில்களை வாங்கி அந்த வாக்கியத்தை படித்துவிட்டு அதன் பிறகும் அதை குடிக்கும் குடிமகன்களை இந்த தமிழகம் பெற்று இருக்கிறது என்று சொன்னால் இது சற்று வருத்தமான செய்தி தான்.

இந்த மதுப்பழக்கத்தால் பல தாய்மார்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய நிம்மதியை இழந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய குடும்பத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்கிறார்கள்.

இப்படிப்பட்ட மது அரக்கனை ஒழிப்பதற்கு இதுவரையும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கமும் தயாராக இல்லை. மாறாக டாஸ்மாக் விற்பனையில் ஒவ்வொரு மாதமும் எத்தனை கோடி ரூபாய் லாபம் வருகிறது என்பதை கணக்கிடும் பணியில் மாநில அரசு தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்ற செய்தி தான் வெட்கக்கேடாக இருக்கிறது.

அந்த வகையில், தஞ்சை மாவட்டம் மறவக்காடு அத்திவெட்டி கிழக்கு பகுதியைச் சார்ந்தவர் மதன்குமார்( 30) இவர் சென்னை நீலாங்கரை காவல் நிலையம் அருகே டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் கடையை அடைத்து விட்டு அதே பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு கார் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து மதன்குமார் மீதும் நடந்து சென்று கொண்டிருந்த ராமாபுரம் சங்கர்( 50) என்பவர் மீதும் அடுத்தடுத்து மோதியது இதில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷங்கர் பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் அடையாறு போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து வந்து சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்துக்கு காரணமாக இருந்த காரை ஓட்டியது சென்னை டி நகர் ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த அன்பரசன் (28) என்பதும் காரில் இருந்தது அவருடைய நண்பர்களான புதுவை ஆனந்த்( 27) கன்னியாகுமரி பொறியாளர் ஹிட்லர் (23) மதுரை ஞானேஸ்வரன் (27) உள்ளிட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.

அதிக மது போதையில் கார் ஓட்டியதால் விபத்து உண்டானதாக காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். இதனை தொடர்ந்து அன்பரசன் கைது செய்யப்பட்டார். ஆனால் இவருடைய தந்தையை காவல் துறையில் டி .எஸ்.பியாக பணியாற்றி வருவதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

Next Post

திட்டிய முதலாளியை தீர்த்துக் கட்டிய காவலாளி..!! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Fri Feb 3 , 2023
பணியின்போது திட்டியதால் முதலாளியை காவலாளி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கின் லம்பினி பகுதியில் சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்பவர் அரோம் பனன் (56) என்பவரின் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அந்த காவலாளியிடம் முதலாளி எப்போதும் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டியும், கண்டிப்புடன் நடத்தியும் வந்துள்ளார். மேலும், மற்ற பணியாளர்களை விட காவலாளியை அதிக நேரம் வேலை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. […]

You May Like