fbpx

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் செய்த வெறிச்செயல்! மனைவி பரிதாப பலி!

கணவன், மனைவி என்ற உறவானாலும் சரி, அல்லது காதலன், காதலி உறவினாலும் சரி எதிலுமே ஒருவர் மீது, ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

கணவன், மனைவி வாழ்க்கை சக்கரத்தில் அச்சாணியே நம்பிக்கை தான் கணவன், மனைவிக்குள் நம்பிக்கையின்மை என்பது ஏற்பட்டு விட்டால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நரகமாக மாறிவிடும்.

அந்த வகையில், நாமக்கல் அருகே தூசூரை சேர்ந்தவர் டிராக்டர் ஓட்டுநர் ராஜா(42) இவருடைய மனைவி பிரமிளா(32) நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பிரமிளா வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ராஜா தன்னுடைய மனைவி பிரமிளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான் நேற்று இரவு இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு உண்டாகி உள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ராஜா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவி பிரமிளாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் பிரமிளா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு நடுவே கணவர் ராஜா நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Post

சொத்தால் வந்த வினை பெண் படுகொலை! திமுக பிரமுகரின் மகன் அதிரடி கைது!

Tue Jan 3 , 2023
முன்பெல்லாம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மாறாக சொந்த பந்தத்துடன் கூட்டுக் குடும்பமாக இருப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள். அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எல்லோரிடத்திலும் இருந்தது. அப்படி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே கூட்டு குடும்பமாக இருக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் குடும்பத்திற்குள் இருப்பவர்களுக்கிடையில் எப்போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை […]

You May Like