போலி பிறப்புச் சான்றிதழ் போலி இருப்பிட சான்றிதழ் போலி இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று பலர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம்.சில மோசடிகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல நேரங்களில் இது போன்ற மோசடிகள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தவறு செய்பவர்கள் துல்லியமாக செய்து விடுகிறார்கள்.இது கூட பரவாயில்லை ஆனால் சில சமயங்களில் ஒரு சில காரணங்களை முன்வைத்து உயிரோடு இருக்கும் ஒருவர் தன்னைத் தானே இறந்து விட்டதாக காட்டிக் கொள்ளும் சம்பவம் திரைப்படங்களில் தான் நடைபெறும்.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.ஜனவரி மாதம் 9ம் தேதி கார் விபத்தில் அரசு ஊழியர் மரணம் அடைந்தார்.இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மோசடி செய்ய நினைத்த அவர் சென்ற 6 மாதங்களுக்கு முன்பிருந்தே இந்த குற்றத்தை செய்வதற்கு திட்டமிட்டதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
6 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து பிரிமியத்தை முறையாக அவர் செலுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.ஆனாலும் கூட சென்ற 12ம் தேதி காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக அவருடைய இறப்புச் சான்றிதழை பெறுவதற்காக அவர் தன்னுடைய மனைவியை தொடர்பு கொண்ட போது அவர் உயிரிழக்கவில்லை, உயிரோடுதான் இருக்கிறார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், அவர் ஹைதராபாத்தில் இருக்கின்ற மாநில செயலகத்தில் உதவி பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.இவர் வெங்கடாபூர் கிராமத்தின் பிம்லா தாண்டாவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் 7ம் தேதி ஓட்டுனருடன் காரில் தன்னுடைய கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார் தர்மா.இந்த நிலையில், கடந்த 8ம் தேதி தன்னுடைய மனைவியிடம் ஹைதராபாத் செல்வதாக தெரிவித்துவிட்டு அந்த கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் அந்த கிராமத்தின் அருகே ஒரு கார் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காரில் உடல் கருகி கிடந்த நபரை கண்டுள்ளனர்.
அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் தர்மா தான் என்று காவல்துறையினர் ஒரு முடிவுக்கு வந்தனர்.அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தர்மாவின் மனைவியையும், அவருடைய தம்பியையும் அந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்த கலந்தது தர்மா தான் என்று அடையாளம் காட்டினர்.
அதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் தர்மாவின் மனைவியின் நடமாட்டத்தை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்னர் தர்மா தன்னுடைய மனைவிக்கு போன் செய்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இறப்பு சான்றிதழை பெற்று இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கிளைம் செய்ய சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை கண்காணித்து வந்த காவல்துறையினர், தர்மாவின் மனைவி மற்றும் அவருடைய தம்பியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜனவரி மாதம் 9ம் தேதி கார்த்தி பிடித்ததில் தர்மா உயிரிழந்ததாக சாட்சி வழங்கியதாக அவர்கள் வாக்குமூலம் வழங்கி உள்ளனர்.
அவருடைய மரணத்தை போலியாக காட்டி தர்மா புனிவுக்கு தப்பிச் சென்றுள்ளார். குற்றம் சுமத்தப்பட்ட தர்மாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோகிணி பிரியதர்ஷினி கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இணையதளம் மூலமாக நடைபெற்ற விளையாட்டில் 1.25 கோடியை இழந்த பின்னர் மிக விரைவாக பணம் சம்பாதிப்பதற்கான சதி திட்டத்தை தர்மா இவ்வாறு ஏற்படுத்தினார் என்று காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.