fbpx

ஆபாச படம் பார்க்கச் சொல்லி மனைவிக்கு சிகரெட்டால் சூடு வைத்த கணவன்..!

பெங்களூரு பானசாவடி பகுதியில் வசித்து வருபவர் பிரதீப்(27). இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரதீப் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி நித்யாவிடம் தகராறு செய்ததுடன் அவரை அடித்து, உதைத்துள்ளார்.

மேலும் அவரது செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும்படி நித்யாவுக்கு, பிரதீப் தொல்லை கொடுத்து வந்ததுள்ளார். ஆனால் செல்போனில் ஆபாச படம் பார்க்க நித்யா விரும்பவில்லை என்பதால் அவர்‌ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப், நித்யாவின் உடம்பில் சிகரெட்டால் சூடுவைத்ததாக தெரிகிறது. மேலும் நித்யா இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வரும் பிரதீப், நண்பர்கள் இருக்கும் போதே நித்யாவை தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில் தனக்கு விவகாரத்து தரும்படி நித்யாவுக்கு, பிரதீப் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் நித்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று பிரதீப் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நித்யா, பிரதீப் மீது பானசாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Rupa

Next Post

சுரங்க மாஃபியாவால் லாரி ஏற்றி கொல்லப்பட்ட டிஎஸ்பி வழக்கு; சிபிஐக்கு மாற்ற கோரிக்கை...

Wed Jul 20 , 2022
அரியானாவில் சுரங்க மாபியா கும்பலால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட டி.எஸ்.பி. வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார். அரியானாவில் நூ மாவட்டத்தில் சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுரங்க பணிகளை பிடிக்க நேற்று சென்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். மேலும் அவரது உடல் ஒரு குப்பை தொட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர […]

You May Like