தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு முன்னணி நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தங்களுக்கு தெரியுமா?
ஒவ்வொரு நடிகைகளும் சில விஷயங்கள் மூலமாக பிரபலம் ஆவார்கள். அப்படி நடிகை சிம்ரன் இடுப்பழகி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சிம்ரன் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை அவருக்கு பிடித்திருந்தால் நடித்து வருகிறார். அதேபோல சென்னையில் ரெஸ்டாரன்ட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
நடிகை சிம்ரன் உடன் பிறந்தவர்களில் ஒருவர்தான் மோனல். இவர் தமிழ் திரையுலகில் பார்வை ஒன்றே போதுமே, பத்ரி, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களை அவர் நடித்திருக்கிறார்.
ஒரு கதாநாயகியாக இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்த சமயத்தில், கடந்த 2002 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் தன்னுடைய வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய தற்கொலைக்கு காதல் தோல்வி தான் காரணம் என்று சொல்லப்பட்டது.