fbpx

திருச்சியை அதிர வைத்த கொள்ளை….! தனி ஒருவனாக மொத்தத்தையும் சுருட்டிய அவர் சிக்கியது எப்படி….!

தமிழகத்தில் கொலை வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அதனை தடுப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசும் காவல்துறையும் மேற்கொண்டு தான் வருகிறது.இருந்தாலும் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று யோசிக்கும் அளவிற்கு கொள்ளையர்களின் துணிகர செயல் அமைகிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற ஐஏஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் தொழிலதிபராக இருந்தவர் இவரும் இவருடைய தம்பி நேதாஜியும் ஒன்று இணைந்து நாடு முழுவதும் சாலை போடுவது உள்ளிட்ட ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்கள்.

இவர்களுடைய வீட்டு விசேஷத்திற்காக சென்ற 23ஆம் தேதி அவர்களின் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றனர் பின்பு மறுபடியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டின் முன்பக்க கதவின் போட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாயினர்.வீட்டிற்குள் சென்று பார்த்த போது 92 சவரன் நகைகள், வைர வளையல் மற்றும் நெக்லஸ் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகளை அமைத்து கொள்ளையனை தீவிரமாக தேடத் தொடங்கினர் இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் காட்டூர் மஞ்சத்திடல் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்தனர்.

ஆனாலும் அந்த கார் நிற்க்காமல் சென்றதால் அந்த காரை பின் தொடர்ந்து சென்று கல்லணை சாலை வேங்கூர் சுடுகாட்டிற்கு அருகே அந்த காரை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அந்த காரில் இருந்து தப்பி சென்ற நபரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சார்ந்த கார்த்திக் என்பதும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

அதோடு அவர் ஓட்டிச் சென்ற காரை சோதனை செய்ததில், அந்த காரில் 22 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை இருந்தது. அதனை கைப்பற்றிய காவல் துறையினர் கொள்ளைனிடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள்.

அதோடு, தொழிலதிபரிடம் இது தொடர்பாக கேட்டபோது, இது தங்களுடைய நகைகள் தான் என்று தேவேந்திரன் தெரிவித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து, விசாரணையில் உண்மையை தெரிவித்த அந்த கொள்ளையனான கார்த்திக் அக்ரஹாரத்தில் இருக்கின்ற அவருடைய வீட்டில் மறைத்து வைத்திருந்த 118 சவரன் நகைகள், மடிக்கணினி, கைபேசி, ரொக்க பணம் உள்ளிட்டவைகள் தொடர்பாக தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வரைந்த காவல்துறையினர் வீட்டில் இருந்த எல்லாவற்றையும் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக உரையாற்றிய திருச்சி சரக டிஐஜி கொள்ளையன் கைது செய்யப்பட்டதாகவும் மீட்கப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பொருட்களுக்கு சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்.அதோடு, கைது செய்யப்பட்ட கொள்ளையன் தனி ஒரு நபராக சென்று கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் கூறினார்.

Next Post

சென்னை விமான நிலையத்தில் இப்படி ஒரு வசதியா..? இனி ஜாலியா படம் பார்க்கலாம்..!! இந்தியாவிலேயே முதல்முறை..!!

Thu Feb 2 , 2023
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து அதிக நேரம் காத்திருக்கும் பயணிகள், சென்னை வந்து இணைப்பு விமானத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக இந்த திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கும், உறவினர் அல்லது நண்பர்களை வரவேற்கவோ, வழியனுப்பவோ காத்திருப்பவர்களுக்கும் இந்த திரையரங்குகள் நிச்சயம் சிறந்த […]

You May Like