fbpx

திருவாரூரில் இளைஞர் வெட்டி படுகொலை….! 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்….!

தற்போது தமிழகத்தில் கொலை செய்யப்படுவது என்பது ஏதோ காய்கறியை வெட்டுவதைப் போல என்றாகிவிட்டது சர்வ சாதாரணமாக பட்ட பகலில் நட்ட நடு ரோட்டில் கொலை செய்து விட்டு சென்று விடுகிறார்கள்.

இது போன்ற அசம்பாவிதங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது ஆனால் மாநில அரசு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறது. முதலமைச்சரோ காவல் துறையும், சட்டம் ஒழுங்கும் என்னுடைய நேரடி மேற்பார்வையில் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்கிறார்.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே இருக்கின்ற அக்கறை நடுத்தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் கவியரசன் (22 )இவர் திருவாரூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளராகவும் இவர் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் அம்மையப்பன் அருகில் உள்ள திருக்கண்ணமங்கையில் ஒரு இறுதிச் சடங்கிற்கு சென்று விட்டு கவியரசன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது 7 பேர் கொண்ட மரண கும்பல் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்து கவியரசனை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி இருக்கின்றனர்.

இதனால் நிலைகுலைந்து போன அவர், அருகில் உள்ள வயல்வெளியில் இறங்கி தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் கவியரசனை விரட்டிச் சென்று கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அந்த கும்பல் இதில் கவியரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்ட அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டு குடவாசல் காவல் துறையினர், அதிபரைவு படை காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதோடு திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கொலை நடைபெற்ற இடத்தில் நேரில் விசாரணை நடத்தி விசாரணையை துரிதப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் அந்த இடத்தில் அக்கம் பக்கம் உள்ள கிராம மக்களும் ஒன்று திரண்டனர்.

மேலும் கவியரசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதால் சமீபத்தில் அவருடைய கிராமத்தில் பாஜக சார்பாக கொடியேற்றப்பட்டதாகவும், அதற்கு கவியரசன் செல்லவில்லை என்பதால் இவர் உள்ளிட்ட மூன்று பேரை அம்மையப்பன் கடை தெருவில் வைத்து ஒரு கும்பல் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இது குறித்து புகார் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற 2️ பேர் வழக்கை திரும்ப பெற்று விட்டனர் இந்த நிலையில், கவியரசன் மட்டும் வழக்கை திரும்ப பெறாமல் இருந்ததால் இந்த படுகொலையின் நடைபெற்று இருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் கவியரசனின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த.னர் பட்ட பகலில் இளைஞர் வயல்வெளியில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

Next Post

இந்து மக்கள் கட்சி நிர்வாகி படுகொலை….! மதுரையில் பயங்கரம்….!

Wed Feb 1 , 2023
தமிழ்நாடு முழுவதும் கொலை நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அதிலும், சமீப காலமாக பாஜக என்று சொன்னாலே தமிழ்நாடு முழுவதும் ஒருவித பயம் ஏற்பட்டு வருகிறது.அதாவது, பாஜக மெல்ல, மெல்ல தமிழகத்தில் வளர்ந்து வரும் இந்த வேளையில், பாஜகவின் கொள்கையை பின்பற்றும் கட்சிகளின் பிரமுகர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது வருத்தம் அளிக்கிறது. ஒருபுறம் பாஜகவின் வளர்ச்சியை தடுப்பதற்கு தமிழகத்தில் என்னதான் வழி என்று ஒரு சாரார் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். மறுபுறம் […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like