தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (33). இவர் சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று அதிகாலை தன்னுடைய ஆட்டோவில் வானரமுட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு கட்டாரங்குளத்திற்கு சென்றுள்ளார்.
அந்த ஆட்டோ வானரமுட்டி கட்டாரங்குளம் இடையே காளம்பட்டி அருகில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இருந்த அந்த பெண்ணை வெட்டி படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை தடுக்க முயற்சி செய்த ஆட்டோ ஓட்டுனர் சண்முகராஜை அந்த கும்பல் தலையில் பலமாக தாக்கி இருக்கிறது.
இதில் ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜன் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதன் பிறகு மயக்கம் தெளிந்த பின்னர் ஆட்டோ ஓட்டுனர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த ஆட்டோ ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதோடு வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி வேறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின்புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
காவல்துறையினரின் விசாரணையில் வெற்றி படுகொலை செய்யப்பட்ட அந்த பெண் கட்டாரங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி வெள்ளைத்துரைச்சி(30) என்பது தெரிய வந்திருக்கிறது.