பிரியாணி கடையில் வேலை பார்த்த வட மாநில இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் அஜீஸ் அகமது என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேபாளத்தைச் சார்ந்த ரோகித் சர்மா என்பவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும் பணியாற்றி வந்தனர். நேற்று இரவு இவர்கள் இருவரும் இரவில் அமர்ந்து பேசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் இன்று காலை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பளு தூக்கும் இயந்திரத்தால் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.