fbpx

அக். 30, 31, நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…! பாஜக கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்திருப்பதாக செய்திகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்திருப்பதாக செய்திகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது வெட்கக்கேடானது. இது சாதனை அல்ல. இது தமிழக மக்களின் குடும்பங்களை படுகுழியில் தள்ளும் வேதனையான முடிவு என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இதனால் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாமல் பாதிப்படையும் என்பதை உணர்ந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

டாஸ்மாக் நிறுவன கொள்ளையால் பாதிக்கப்பட்ட தமிழக தாய்மார்கள், தீபாவளி சிறப்புமது விற்பனை இலக்கால் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.ஏழை நடுத்தர மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு, தீபாவளி பண்டிகை திரு நாட்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு வரும் தீபாவளி பண்டிகை திருவிழா காலமான அக்டோபர் 30, 31, நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட வேண்டும். மதுவிலக்கு மாநாடு என்று ஆரம்பித்து விடுதலை சிறுத்தை கட்சிகளின் மகளிர் மாநாடாக நடத்தி, கடைசியில் பாஜக எதிர்ப்பு மாநாடாக முடித்த அண்ணன் திருமாவளவன் இதுகுறித்து தமிழக அரசை கண்டிப்பாரா..?

இந்து மத பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு மது விற்பனையை அதிகரிப்பது குறித்து கவலைப்பட மாட்டேன் என்று கூறுவாரா? தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் நம் வீட்டுக்கு கொடுத்து, தமிழக அரசின் டாஸ்மாக் உரிமைத்தொகை என நம்மிடமிருந்து, மாதம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து வருவதை தமிழக மக்கள் உணர வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாக மாறி, மகளிர் வாழ்க்கையை சீர்குலைக்கும் அரசாக மாறி வருவதை உணர்ந்து, தமிழக மக்கள் அனைவரும் அரசியல் விழிப்புணர்வு அடைய வேண்டும். தங்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

Oct. 30, 31 and 1st of November, Tasmac shops will be closed for three days

Vignesh

Next Post

நடுவானில் விமானி திடீர் மரணம்!. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்!. பயணிகள் அதிர்ச்சி!

Thu Oct 10 , 2024
Turkish Airlines Pilot Dies Mid-Flight, Forcing Emergency Landing

You May Like