fbpx

மக்களே…! 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று புதிய புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மொய்ப்பணம் கொடுக்கும் போது 1 ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுக்கிறார்களே, அது ஏன்.? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!

Thu Nov 30 , 2023
கல்யாணம் முதல் காது குத்து சடங்கு கிரகப்பிரவேசம் என அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் மொய் வைக்கும் பழக்கம் தொன்று தொட்டே நம் தமிழர்களிடம் இருந்து வருகிறது. பொதுவாக எவ்வளவு ரூபாய் மொய் வைத்தாலும் அதோடு ஒரு ரூபாய் சேர்த்து மொய் வைப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. உதாரணமாக 101, 1001,10001 என்றுதான் மொய் வைப்பார்கள். இது ஏன் என்று நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா.? இதற்கு என்ன காரணம் என்று […]

You May Like