சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் ஏ.சி.சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஏ.சி.சண்முகத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! அகவிலைப்படி அதிரடி உயர்வு..!!