பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடும்ப செலவிற்க்காக, ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு சற்றே காலதாமதம் ஆனதால், அந்த பெண் கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நபருக்கும் கடந்த 18ஆம் தேதி இந்த கடன் குறித்து பிரச்சனை எழுந்துள்ளது. கடனை திருப்பி கேட்டு, தகராறு செய்த அந்த நபர் பணத்தை கொடுக்கவில்லை என்றால், உன்னுடைய செல்போனை கொடு என்று கேட்டுள்ளார். ஆனால், இதற்கு அந்த பெண்மணி மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தான், அந்த பெண்ணுக்கும் அவருக்கு கடன் கொடுத்த நபருக்கும் இடையில், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் கொண்ட அந்த கடன் கொடுத்த கும்பல் அவரை கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. தாய் தாக்கப்படுவதை கண்ட அவருடைய மகள் கடன் கொடுத்தவர்களை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனாலும் அவருக்கும் அடி விழுந்து உள்ளது.
பின்னர் அந்த பெண்ணை கொடூரமான முறையில் தாக்கிய அந்த கும்பலிடமிருந்து, எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அந்த பெண், எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை. இறுதியில் கடும் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல், தொடர்ந்து அந்த பெண்ணை கொடூரமான முறையில் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்மணி உடனடியாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதில் அந்த கும்பலை தடுப்பதற்காக இடையில் வந்த அந்த பெண்ணின் மகளுக்கு, முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த பெண்மணி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு, அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில், அந்தப் பெண்ணின் உறவினர்கள் புகார் வழங்கியதை தொடர்ந்து, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பிறகு இந்த கொலை சம்பவம் குறித்து, நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்