இந்தியா முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில், அதிக அளவிலான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், இது போன்ற பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருப்பதும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் என்று பரவலாக பேசப்படுகிறது.
பல நேரங்களில், பல சமயங்களில், அது உண்மை என்று நிரூபிக்கும் விதத்தில், பல்வேறு சம்பவங்கள் அந்த மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சர்தார் கொட்வாலி பகுதியை சேர்ந்தவர் மசூம் ரசா ரஹீ. இவர் அந்த மாவட்டத்தின் பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவராக இருக்கிறார். இவர் வீட்டின் மேல் மாடியில், இருக்கக்கூடிய பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்தோடு, வசித்து வருகிறார். அந்த சிறுமியின் தாயார், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இயற்கை எய்தி விட்ட நிலையில், அந்த சிறுமியின் தந்தை மற்றும் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுடன் அந்த சிறுமி வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தான், கடந்த 28ஆம் தேதி அந்த சிறுமி தனியாக இருந்த சமயத்தில், வீட்டிற்கு வந்த ரஹி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை, அவரை தடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும், அந்த பாஜக பிரமுகர் சிறுமியின் தந்தையை கடுமையாக தாக்கி இருக்கின்றார். இதனால், அந்த சிறுமியின் தந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், பாஜக பிரமுகர் மீது இதுவரையில் இந்த வழக்கு குறித்து எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.