fbpx

அடிதூள்…! 10,11,12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வு எழுதும்‌ மாணவர்களுக்கு சிற்றுண்டி…! அரசு அதிரடி உத்தரவு…!

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில்‌; அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளி மேலாண்மை குழு கூட்டம்‌ மாதம் தோறும்‌, முதல்‌ வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும்‌. அடுத்த பள்ளிமேலாண்மை குழு கூட்டம்‌ வரும்‌ 9-ம் தேதி பிற்பகல்‌ 3 மணி முதல்‌ 4.30 மணிவரை கட்டாயம்‌ நடத்தப்பட வேண்டும்‌.

2023-24-ம்‌ கல்வியாண்டில்‌ பள்ளி இடைநிற்றல்‌ இல்லாமல்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ படிப்பை தொடர்வதையும்‌, அனைத்து வகை அரசுப்‌ பள்ளிகளிலும்‌ குழந்தைகள்‌ தடையின்றி சேர்க்கப்படுவதையும்‌ பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில்‌ கலந்தாலோசிக்க வேண்டும்‌. பள்ளியின்‌ அருகிலோ, குடியிருப்பு பகுதியிலோ யாரேனும்‌ மாற்றுத்திறன்‌ குழந்தைகள்‌ பள்ளியில்‌ சேராமல்‌ இருந்தால்‌, அவர்களது பெற்றோரை சந்தித்து குழந்தையை பள்ளியில்‌ சேர்க்க அறிவுறுத்த வேண்டும்‌. அனைத்து தரப்பு மாணவர்களும்‌ கல்வி கற்பது அவசியம்‌.

அரசு பள்ளிகளில்‌ தொடக்க பள்ளியில்‌ 5ம்‌ வகுப்பு, நடுநிலை பள்ளியில்‌ 8-ம்‌ வகுப்பு, உயர்நிலை பள்ளியில்‌ 10-ம்‌ வகுப்பு, மேல்நிலை பள்ளிகளில்‌ 11-ம்‌ வகுப்பு படித்து நிறைவு செய்த மாணவர்கள்‌ அடுத்த வகுப்புகளில்‌ தொடர்வதையும்‌ உறுதி செய்ய வேண்டும்‌. 10,11,12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வு எழுதும்‌ மாணவர்களுக்கு பள்ளியில்‌ சிறப்பு பயிற்சி வகுப்புகள்‌ நடைபெறுவதற்கும்‌, அந்த மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கும்‌ குழுவின்‌ உறுப்பினர்கள்‌ தகுந்த ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பயங்கரம்...! ஒடிசாவில் மொத்தம் 11 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது....! முழு விவரம்...

Sat Jun 3 , 2023
கோரமண்டல்‌ ரயிலின்‌ எஞ்சின்‌ மற்றும்‌ 11 பெட்டிகள்‌ தடம்‌ புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. கோரமண்டல்‌ ரயிலின்‌ எஞ்சின்‌ மற்றும்‌ 11 பெட்டிகள்‌ தடம்‌ புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயிலின்‌ […]

You May Like