சேலம் மாவட்ட பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தில் மெய்யப்பன் மற்றும் மைதிலி என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களின் மகள் திவ்யா (16) அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பிறகு அவர் மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பெற்றோர்கள் கட்டிட வேலை செய்து வருவதால் போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்துள்ளனர். தற்போது மகள் திவ்யாக்கு மூக்கு கண்ணாடி வாங்கி தர இயலவில்லை என்று கூறப்படுகிறது.
பெற்றோர் நிலையை பார்த்து மனமுடைந்த திவ்யா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதனிடையே பொலிசார் திவ்யா எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
கடிதத்தில், என் தற்கொலைக்கு நான் மட்டுமே காரணம் வேறு யாரும் காரணம் இல்லை என்றும். எனக்கு ஆண்டுக்கு ஆகும் செலவையாவது குறைக்கவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், இனிமேல் எனக்காக செலவு இருக்காது. அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று எழுதியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.